செய்திகள்
லிவர்பூல் கால்பந்து அணி பயிற்சியாளர் க்ளோப்

லிவர்பூல் அணியை தோற்க வையுங்கள்: கடிதம் எழுதிய 10 வயது சிறுவனுக்கு க்ளோப் உருக்கமான பதில்.....

Published On 2020-02-24 10:40 GMT   |   Update On 2020-02-24 10:40 GMT
லிவர்பூல் அணியை தோற்க வையுங்கள் என்று மான்செஸ்டர் யுனைடெட் அணியின் 10 வயது ரசிகன் எழுதிய கடிதத்திற்கு க்ளோப் பதில் அளித்துள்ளார்.
இங்கிலிஷ் பிரிமீயர் லீக்கில் லிவர்பூல் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. யூரோ சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பெரும்பாலான கோப்பைகளை வென்றுள்ளது. 2019-20 இங்கிலிஷ் பிரிமீயர் லீக்கில் இதுவரை 26 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டிகளில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. ஒரு போட்டியை மட்டுமே டிரா செய்தது. இதன்மூலம் 76 புள்ளிகள் பெற்றுள்ளது

மான்செஸ்டர் சிட்டி 57 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. லிவர்பூல் இன்னும் 12 போட்டிகளில் விளையாட உள்ளது. லிவர்பூல் ஏறக்குறைய இங்கிலிஷ் பிரிமீயர் லீக் சாம்பியன் படத்தை நெருங்கிவிட்டது.

நட்சத்திர அணியான மான்செஸ்டர் யுனைடெட் 27 போட்டிகளில் 11 வெற்றி, தலா 8 தோல்வி மற்றும் டிராவுடன் 41 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை.

இதனால் விரக்தியடைந்த மான்செஸ்டர் யுனைடெட் அணியின் 10 வயது ரசிகன் டாராக் கர்லே ரிவர்பூல் அணியின் பயிற்சியாளரான ஜுர்கென் க்ளோப்பிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் லிவர்பூல் அணியை தோற்கடியுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

க்ளோப்புக்கு 10 வயது சிறுவன் டாராக் கர்லே எழுதிய கடிதத்தில் ‘‘நீங்கள் இன்னும் 9 போட்டிகளில் வெற்றி பெற்றால், இங்கிலிஷ் கால்பந்தில் தோற்கடிக்க முடியாத சிறந்த அணி என்ற சாதனையை படைத்து விடுவீர்கள். இது எனக்கு மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது.

ஆகவே, அடுத்த போட்டியின்போது லிவர்பூல் அணியை தோற்கடிக்க வையுங்கள். நீங்கள் எதிரணியை கோல் அடிக்க விடவேண்டும். லீக் சாம்பியன் அல்லது வரவிருக்கும் எந்தவொரு போட்டியையும் வெல்லக்கூடாது என்ற நினைப்புக்கு உங்களை மாற்றிவிட்டதாக நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த லிவர்பூல் பயிற்சியாளர் ஜுர்கென் க்ளோப், அந்த சிறுவக்கு பதில் அளித்துள்ளார். க்ளோப் தனது பதிலில் ‘‘இந்த சூழ்நிலையில் நான் உனது வேண்டுகோளை ஏற்க முடியாதது துரதிருஷ்டவசமானது.

நீ லிவர்பூல் அணி தோல்வியடைய வேண்டும் என விரும்புகிறாய். ஆனால் என்னால் அந்த அணியை வெற்றி பெற வைக்க முடியும் என உலகில் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் நம்புகிறார்கள். ஆகவே, அணியை உண்மையிலேயே தோற்க வைக்க நான் விரும்புவதில்லை.

உன்னுடைய அதிர்ஷ்டம் என்னவென்றால், நாங்கள் கடந்த காலத்தில் தோற்றுள்ளோம். வருங்காலத்திலும் தோற்போம். ஏனென்றால் இது கால்பந்து.

10 வயது என்பதால் உங்களுக்கு இதுபோன்ற சிந்தனை வருகிறது. ஆனால், 52 வயதில் இதுபோன்ற சிந்திக்க முடியாது என்பதை மட்டும் என்னால் கூற முடியும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News