செய்திகள்
விராட் கோலி

மோசமான பேட்டிங்கால் பின்னடைவு - தோல்வி குறித்து கோலி கருத்து

Published On 2020-02-24 05:30 GMT   |   Update On 2020-02-24 05:30 GMT
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்கால் பின்னடைவு அடைந்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
வெலிங்டன்:

தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

இந்த டெஸ்டில் நாங்கள் ‘டாசில்’ தோற்றோம். ‘டாஸ்’ மிகவும் முக்கியமானதாகும். ஆனால் அதே நேரத்தில் பெருமை அளிக்க கூடிய வகையில் பேட்டிங் வரிசை இருக்காது. நாங்கள் சவால் கொடுக்கும் வகையில் போதுமான அளவுக்கு ஆடவில்லை.

பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. 220-230 ரன்களை எடுத்து இருந்தால் கூட நன்றாக இருந்து இருக்கும். மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

எனவே முதல் இன்னிங்சில் மோசமான பேட்டிங் பின்னடைவை ஏற்படுத்தியது.

பந்து வீச்சில் நாங்கள் சவால் விடும் வகையில் திகழ்ந்தோம். நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்தது வரை நாங்கள் நன்றாகவே திகழ்ந்தோம். முன்னிலையை 100 ரன்களாக கொண்டுவர நினைத்தோம். ஆனால் கடைசி 3 வீரர்கள் பேட்டிங் எங்களை வெளியேற்றி விட்டது. பந்து வீச்சாளர்கள் இன்னும் கட்டு கோப்புடன் வீசி இருக்க வேண்டும். பவுலர்களும் தங்கள் பந்து வீச்சில் மகிழ்ச்சி அடைந்து இருக்க மாட்டார்கள்.

பிரித்விஷா போன்றவர்களை குறை சொல்ல வேண்டாம். 2 வெளிநாட்டு டெஸ்டுகளில் தான் ஆடியுள்ளார். ரன்களை எடுப்பது எப்படி என்று அவர் மேம்பட்டு வருகிறார்.

பேட்டிங்கில் அகர்வால். ரகானேவை தவிர மற்றவர்கள் சரியாக ஆடவில்லை. பேட்டிங்கி மிகப் பெரிய ஸ்கோரை குவித்தால் தான் பந்து வீச்சாளர்கள் சவால் கொடுக்க முடியும். இதுதான் நமது பலம், இந்த டெஸ்டில் இந்த அம்சம் இல்லாமல் போனது.

இந்த டெஸ்டில் நாங்கள் நன்றாக ஆடவில்லை என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். தோல்வியால் உலகமே முடிந்து போய் விடவில்லை. நாங்கள் சொந்த மண்ணில் சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்று இருக்கிறோம்.

வெளிநாடுகளில் விளையாடும் போது ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

நான் நன்றாக இருக்கிறேன். எனது பேட்டிங சிறப்பாகவே இருக்கிறது. ரன்களை குவிக்காததால் எனது பேட்டிங் திறன் பாதிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நியூசிலாந்து பயணத்தில் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 20 ஓவர் போட்டிகளில் 45, 11, 38, 11, ஒருநாள் ஆட்டங்களில் 51, 15, 9, இந்த டெஸ்டில் 2 மற்றும் 19 ரன்கள் எடுத்தார்.
Tags:    

Similar News