செய்திகள்
75 ரன்கள் விளாசிய நியூசிலாந்து கேப்டன் சோபி டெவைன்

பெண்கள் டி20 உலக கோப்பை: வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் வெற்றி

Published On 2020-02-23 08:32 GMT   |   Update On 2020-02-23 08:32 GMT
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் தொடக்க போட்டியில் வெற்றி பெற்றன.
பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் தாய்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய தாய்லாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்களே அடித்தது. விக்கெட் கீப்பர் கோன்சாரோயென்கை அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் 79 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 127 ரன்கள் சேர்த்தது. பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் கேப்டன் சோபி டெவைன் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் விளாசினார்.
Tags:    

Similar News