செய்திகள்
இந்திய வீரர் சுனில் குமார்

ஆசிய மல்யுத்தம் - இந்திய வீரர் சுனில் குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Published On 2020-02-18 20:39 GMT   |   Update On 2020-02-18 20:39 GMT
ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுனில் குமார், கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
புதுடெல்லி:

ஆசிய மல்யுத்த சாம்பியன்‌ஷிப் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் ‘கிரிகோ ரோமன்’ 55 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இந்திய வீரர் அர்ஜூன் ஹலாகுர்கி 7-4 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் டோங்யோக் வானை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் பெற்றார். 87 கிலோ எடைப்பிரிவு அரைஇறுதியில் இந்திய வீரர் சுனில் குமார், கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவை சந்தித்தார். இதில் 1-8 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த சுனில் குமார் கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்டு தொடர்ச்சியாக 11 புள்ளிகள் குவித்ததுடன், சரிவில் இருந்து மீண்டு 12-8 என்ற புள்ளி கணக்கில் அஜாமத் குஸ்துபயேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்‌ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்த சுனில் குமார் தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 130 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் மெஹர் சிங் 1-9 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் மின்செக் கிம்மிடம் தோல்வி அடைந்தார்.

ஆசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்றுள்ள ஜப்பான், தென்கொரியா மற்றும் சீன தைபேவை சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மூககவசம் அணிந்தபடி தங்கள் பந்தயங்களில் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தல் மற்றும் டெல்லியில் நிலவும் காற்று மாசு ஆகியவற்றுக்கு பயந்து வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூககவசம் அணிந்து போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News