செய்திகள்
ஸ்மித் பட்டேல்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஒரே நாளில் 490 ரன்கள் குவித்த கோவா அணி

Published On 2020-02-12 11:56 GMT   |   Update On 2020-02-12 11:56 GMT
கொல்கத்தாவில் இன்று தொடங்கிய ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மிசோரம் அணிக்கெதிராக கோவா முதல் நாளில் 490 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
ரஞ்சி கோப்பைகைக்கான கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கியது. கொல்கத்தாவில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் கோவா- மிசோரம் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மிசோரம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கோவா அணியின் அமோன்கர், கோவேகார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அமோன்கர் 32 ரன்னிலும், கோவேகார் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

3-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் பட்டேல் உடன் கேப்டன் அமித் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பட்டேல் 236 ரன்கள் குவித்தும், அமித் வர்மா 148 ரன்கள் குவித்தும் ஆட்டமிழந்தனர்.

பட்டேல் ஆட்டமிழந்ததும் கோவா தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அந்த அணி 77.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 490 ரன்கள் குவித்தது. கோவா ஒரே நாளில் 450 ரன்னுக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துள்ளது.
Tags:    

Similar News