செய்திகள்
லாமிச்சேன்

அமெரிக்காவை 35 ரன்னில் சுருட்டி அபார வெற்றி பெற்றது நேபாளம்

Published On 2020-02-12 10:01 GMT   |   Update On 2020-02-12 10:01 GMT
மணி நேரம் 39 நிமிடங்களில் முடிந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவை 35 ரன்னில் சுருட்டி நேபாளம் அபார வெற்றி பெற்றது.
ஒரு மணி நேரம் 39 நிமிடங்களில் முடிந்த  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவை 35 ரன்னில் சுருட்டி நேபாளம் அபார வெற்றி பெற்றது.

நேபாளம் - அமெரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிர்திபூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நேபாளம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அமெரிக்காவின் தொடக்க வீரர் மார்ஷல் மட்டும் தாக்குப்பிடித்து 16 ரன்கள் அடித்தார்.

மற்ற வீரர்கள் ஒற்றையிலபக்க ரன்னில் வெளியெற அமெரிக்கா 35 ரன்னில் சுருண்டது. நேபாளம் அணி சார்பில் லாமிச்சேன் 6 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார். பின்னர் 36 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நேபாளம் 5.2 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து வெற்றி பெற்றது.

9.30 மணிக்கு தொடங்கிய போட்டி 11.09 மணிக்கு முடிந்து விட்டது. 50 ஓவர் போட்டி ஒரு மணி நேரம் 39 நிமிடத்திற்குள் முடிந்தது இதுவே முதல் முறையாகும்.
Tags:    

Similar News