செய்திகள்
பும்ரா

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: 2-வது இடத்திற்கு சரிந்தார் பும்ரா

Published On 2020-02-12 09:31 GMT   |   Update On 2020-02-12 09:31 GMT
நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அடைந்த பும்ரா தரவரிசையில் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. இந்தத் தொடர் பும்ராவுக்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்தது. மூன்று போட்டிகளிலும் 30 ஓவர்கள் வீசினார். இதில் ஒரு ஓவரை மட்டுமே மெய்டனாக வீசினார். 167 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் ஏமாற்றம் அளித்தார்.

பும்ரா கடந்த 2016-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அதில் இருந்து இந்தத் தொடருக்கு முன்பு வரை குறைந்தது ஒரு விக்கெட்டாவது வீழ்த்தாமல் இருந்தது கிடையாது. முதன்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக இந்தத் தொடரில் பும்ரா மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்தார்.

இந்த ஏமாற்றம் மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். டிரென்ட் போல்ட் 727 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பும்ரா 719 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். முஜீப் உர் ரஹ்மான் 3-வது இடத்தையும், ரபடா 4-வது இடத்தையும், பேட் கம்மின்ஸ் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Tags:    

Similar News