செய்திகள்
மேக்ஸ்வெல்

தென்ஆப்பிரிக்கா தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து மேக்ஸ்வெல் விலகல்

Published On 2020-02-12 14:04 IST   |   Update On 2020-02-12 14:04:00 IST
முழங்கை காயத்திற்கு ஆபரேசன் செய்ய இருப்பதால் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.

இதற்கான ஆஸ்திரேலியா அணியில் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் இடம் பிடித்திருந்தார். அவர் முழங்கை காயம் சரியாக ஆபரேசன் செய்து கொள்ள இருக்கிறார். இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக டி'ஆர்கி ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Similar News