செய்திகள்
அரைசதம் அடித்த ஜோ டென்லி, 49 ரன்னில் ஆட்டமிழந்த ஜோ ரூட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது போட்டியை வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

Published On 2020-02-09 15:55 GMT   |   Update On 2020-02-09 15:55 GMT
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தென்ஆப்பிரிக்காவும், வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கிலாந்தும் களம் இறங்கின.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்காவின் டி காக், ரீசா ஹென்றிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரீசா ஹென்றிக்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டெம்பா பவுமா 29 ரன்னிலும், வான் டெர் துஸ்சன் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய டி காக் 69 ரன்னில் வெளியேறினார். டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 53 பந்தில் 69 ரன்கள் அடிக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷித் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 43 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 6.2 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் குவித்தது.

மறுமுனையில விளையாடிய ஜேசன் ராய் 21 ரன்னிலும், மோர்கன் 9 ரன்னிலும் வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஜோ டென்லி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரைசதம் அடிப்பார் என்று எதிபார்த்த ஜோ ரூட் 52 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அரைசதம் ஜோ டென்லி  66 ரன்னில் ஆட்டமிழந்தார். டாம் பான்டன் 32 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். மொயீன் அலி நிலைத்து நின்று விளையாட இங்கிலாந்து 43.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை 1-1 என சமன் செய்தது. மொயீன் அலீ 16 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Tags:    

Similar News