செய்திகள்
ராவல்பிண்டி டெஸ்ட்: மசூத், பாபர் அசாம் அசத்தல் சதம் - 2ம்நாள் முடிவில் பாகிஸ்தான் 342/3
ராவல்பிண்டியில் நடைபெறும் வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷான் மசூத், பாபர் அசாம் சதமடித்து அசத்த, இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 342 ரன்கள் எடுத்துள்ளது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் களமிறங்கியது. மொமினுல் ஹக் 30 ரன்னிலும், நஜ்முல் ஹொசைன் 44 ரன்னிலும், முகமது மிதுன் 63 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், வங்காளதேசம் அணி 82.5 ஓவரில் 233 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், முகமது அப்பாஸ், ஹாரிஸ் சோஹைல் ஆகியோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் சிறப்பான தொடக்கம் அளித்தார்.
அவருக்கு பாபர் அசாம் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர். ஷான் மசூத் 100 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 342 ரன்கள் எடுத்தது. பாபர் அசாம் 143 ரன்னுடனும், ஆசாத் ஷபிக் 60 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.