செய்திகள்
கேஎல் ராகுல்

சர்வதேச போட்டிக்குதான் புதிது, உள்ளூரில் நான் பழக்கபட்டவன்: கேஎல் ராகுல்

Published On 2020-01-24 15:14 GMT   |   Update On 2020-01-24 15:14 GMT
சர்வதேச கிரிக்கெட்டில்தான் நான் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது புதிதாக தோன்றும், ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக அளவில் அந்த பணியை செய்துள்ளேன்.
இந்திய அணிக்காக எந்தவொரு இடத்திலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கும் கேஎல் ராகுல், தற்போது விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவதை எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். ஆனால் ஏற்கனவே நான் விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளேன் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘நான் உண்மையிலேயே விக்கெட் கீப்பர் பணியை விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் நான் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது புதிது என்று நினைக்கிறார்கள். ஆனால், உள்ளூர் கிரிக்கெட்டில் நான் ஏற்கனவே விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளேன். ஐபிஎல் தொடரில் நான் விளையாடும் அணிக்காகவும் பணியாற்றியுள்ளேன். ஸ்டம்பிற்கு பின்னால் பணியாற்றுவது மகிழ்ச்சியாக செய்து வருகிறேன்.

விக்கெட் கீப்பராக பணியாற்றும்போது ஆடுகளம் எப்படி செயலாற்றுகிறது என்பது குறித்து கீப்பருக்கு தகவல் கொடுக்க எனக்கு ஐடியா கிடைக்கும். விக்கெட் கீப்பராக இருக்க நீங்கள் நடக்கக் கூடியதை முன்கூட்டியே அறியக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

நான் அணியில் நீண்ட நாட்களாக இடம் பிடித்திருந்தாலும் விளையாடுவதற்கு போதுமான அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு பேட்ஸ்மேனாக ஆடுகளத்தில் போதுமான அளவிற்கு நின்று இருக்க வேண்டும். உள்ளூர் போட்டிகளில் ரன்கள் குவித்தது, தற்போது எனக்கு உதவிகரமாக இருக்கிறது’’ என்றார்.
Tags:    

Similar News