செய்திகள்
கரோலின் வோஸ்னியாக்கி

கண்ணீருடன் டென்னிசில் இருந்து டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி ஓய்வு

Published On 2020-01-24 08:12 GMT   |   Update On 2020-01-24 08:12 GMT
ஆஸ்திரேலியா ஓபன் 3-வது சுற்றில் தோல்வியடைந்த டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி கண்ணீரடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது ஆட்டம் ஒன்றில் டென்மார்க் வீராங்கனை வோஸ்னாக்கி தோல்வி அடைந்தார். அவரை துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூர் 7-5, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

தோல்வி அடைந்த பிறகுதான் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக வோஸ்னாக்கி அறிவித்தார். அப்போது அவர், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

2018-ம் ஆண்டு முடக்குவாதம் நோய் இருப்பது கண்டறியப்பட்டது என்றும், குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாலும் ஆஸ்திரேலிய ஓபனுக்கு பிறகு ஓய்வு பெற முடிவு செய்திருந்ததாக தெரிவித்தார்.

29 வயதான வோஸ்னாக்கி 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றிருந்தார். அவர் பெற்ற ஒரே ஒரு கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.
Tags:    

Similar News