செய்திகள்
கோல் அடித்த மகிழ்ச்சியில் கோவா வீரர்கள்.

ஐஎஸ்எல் கால்பந்து - கவுகாத்தியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது கோவா

Published On 2020-01-08 17:38 GMT   |   Update On 2020-01-08 17:38 GMT
கோவாவின் பனாஜியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கவுகாத்தி அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது எப்.சி. கோவா.
பனாஜி:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கோவாவின் பனாஜியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி கோவா மற்றும் கவுகாத்தி அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் எந்த அணியினரும் கோல் போடவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 0-0 என சமனிலையில் இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோவா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் மிஸ்லாவ் கோமோர்ஸ்கி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அவரை தொடர்ந்து, மற்றொரு வீரர் பெரான் கொராமினஸ் 82-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இறுதியில், கோவா அணி 2-0 என்ற கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன்மூலம், கோவா அணி தான் ஆடிய 12 போட்டிகளில் 7 வெற்றி, 2 தோல்வி மற்றும் 3 ஆட்டங்களில் டிரா செய்து 24 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

கவுகாத்தி அணி தான் ஆடிய 10 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்வி மற்றும் 5 ஆட்டங்களில் டிரா செய்து 11 புள்ளிகளை பெற்று எட்டாம் இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News