செய்திகள்
ஜேம்ஸ் ஆண்டர்சன்

போர்ட் எலிசபெத் டெஸ்டில் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடுவாரா?

Published On 2020-01-08 14:31 GMT   |   Update On 2020-01-08 14:31 GMT
கேப் டவுன் டெஸ்ட் ஐந்தாம் நாள் ஆட்டத்தின்போது காயம் அடைந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் போர்ட் எலிசபெத் டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. 2-வது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுக்களை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் (18), ஸ்டூவர்ட் பிராட் (23), பென் ஸ்டோக்ஸ் (23.4), சாம் கர்ரன் (16) ஆகியோர்  81 ஓவர்கள் வீசினர். ஜேம்ஸ் ஆண்டர்சன் 18 ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். 2-வது செசனின் போது அவரது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக உணர்ந்தார். இதனால் தேனீர் இடைவெளிக்குப்பின் பந்து வீசவில்லை.

இதனால் அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்க இருக்கிறார்கள. காயத்தின் தன்மை வீரியமாக இருந்தால் போர்ட் எலிசபெத் டெஸ்டில் விளையாட முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலில் ஏற்பட்ட காயம் குணடைந்த பின் தென்ஆப்பிரிக்கா தொடரின்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News