செய்திகள்
சேப்பாக்கம் ஸ்டேடியம்

ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு சேப்பாக்கம் ஸ்டேடியம் புதுப்பிப்பு?

Published On 2020-01-08 06:34 GMT   |   Update On 2020-01-08 06:34 GMT
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், எம்.சி.சி.க்கும் இடையே ஒருமித்த ஒப்பந்தம் ஏற்பட்டதால் ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு சேப்பாக்கம் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளாது.
சென்னை:

இந்தியாவில் பழமை வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானமாகும்.

2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்காக சேப்பாக்கம் ஸ்டேடியம் இடித்து புதிதாக கட்டப்பட்டது. 12 புதிய ஸ்டாண்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் (எம்.சி.சி.) இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் 9 ஸ்டாண்டுகளே கட்டப்பட்டது. எம்.சி.சி. ஸ்டாண்டு புதுப்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு சேப்பாக்கம் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படும் என்றே தெரிகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், எம்.சி.சி.க்கும் இடையே ஒருமித்த ஒப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுகிறது.

எம்.சி.சி. ஸ்டாண்டோடு, அண்ணா பெவிலியன் பிளாக்கும் புதுப்பிக்கப்படுகிறது. இங்குதான் வீரர்கள் தங்கும் அறை மற்றும் கார்ப்பரேட் பாக்ஸ்கள் உள்ளன.

மே மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்தில் இந்த புதுப்பிக்கும் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிவரை சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டிகள் இல்லை என்பதால் புதுப்பிக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.

இதில் ஒரு டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெறும். புதுப்பிக்கப்பட்ட ஸ்டேடியத்தில் இந்த டெஸ்ட் நடைபெறும்.
Tags:    

Similar News