செய்திகள்
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நவ்தீப் சைனி

இந்தியா துல்லியமான பந்து வீச்சு: 143 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை

Published On 2020-01-07 20:48 IST   |   Update On 2020-01-07 20:48:00 IST
இந்திய பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பான வகையில் பந்து வீச, இலங்கை அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவராலும் அதிரடியாக விளையாட முடியவில்லை. என்றாலும் விக்கெட் இழக்காமல் விளையாடினர்.

இந்த ஜோடியை வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். அவிஷ்கா பெர்னாண்டோ 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். குணதிலகாவை (20) நவ்தீப் சைனி வீழ்த்தினார். குசால் பெரேரா 28 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை வீழ்த்த இலங்கை அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை.

பும்ரா வீசிய கடைசி ஓவரில் இலங்கை அணி தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் விரட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும் நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

Similar News