செய்திகள்
ரிஷப் பண்ட், சவுரவ் கங்குலி

ரிஷப் பண்ட் ஸ்பெஷல் டேலன்ட் கொண்டவர்: பிசிசிஐ தலைவர் கங்குலி

Published On 2020-01-07 12:20 GMT   |   Update On 2020-01-07 12:20 GMT
இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் ஸ்பெஷல் டேலன்ட் கொண்டவர் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். டோனிக்குப் பதிலாக இவரை நீண்ட கால வீரராக தயார் செய்ய இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. ஆனால் ரிஷப் பண்ட் சில தொடர்களில் சொதப்பியதால் விமர்சனம் எழும்பியது.

ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பத்தினார். இன்னும் அணி நிர்வாகம் அவர் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்துள்ளது.

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் ரிஷப் பண்ட் ஸ்பெஷல் டேலன்ட் கொண்டவர் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட்-ஐ அணிக்கு தேர்வு செய்வது தேர்வுக்குழு விவகாரம். அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், ரிஷப் பண்ட் ஸ்பெஷல் டேலன்ட் கொண்டவர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் எப்படி விளையாடினார் என்பதை நாம் பார்த்தோம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால், முடிவில் தேர்வுக்குழுவுதான் முடிவு எடுக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News