செய்திகள்
எம்எஸ்கே பிரசாத்

10 சிறந்த பேக்-அப் வீரர்களை கண்டறிந்துள்ளோம் என்கிறார் எம்எஸ்கே பிரசாத்

Published On 2020-01-03 10:12 GMT   |   Update On 2020-01-03 10:12 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரான எம்எஸ்கே பிரசாத், மிகச் சிறந்த பேக்-அப் வீரர்களை கண்டறிந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருப்பர் எம்எஸ்கே பிரசாத். இவரது பதவிக்காலம் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. அவருக்குப் பதிலாக புதிய தலைவரை விரைவில் பிசிசிஐ நியமிக்க இருக்கிறது.

இந்நிலையில் எங்களது பதவிக்காலத்தில் தலைசிறந்த 10 பேக்-அப் வீரர்களை கண்டறிந்து பெஞ்ச் வலிமையை அதிகரித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

நீங்கள் தொடக்க பேட்ஸ்மேன்களை எடுத்துக் கொண்டால் ரோகித் சர்மா தற்போது முன்னணியில் உள்ளார். அவருடன் மயங்க் அகர்வால் களம் இறங்கி விளையாடி வருகிறார். மேலும், பிரித்வி ஷா, கேஎல் ராகுல், அபிமன்யு ஈஷ்வரன், பிரியங்க் பன்சால் உள்ளனர். எந்தவொரு நாட்களிலும் இதில் உள்ள வீரர்களால் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாட முடியும்.

பந்து வீச்சில் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் நவ்தீப் சைனி, அவேஷ் கான், பாசில் தம்பி, சந்தீப் வாரியர், இஷாந்த் பொரேல், முகமது சிராஜ் ஆகியோரை தயார் படுத்து வைத்துள்ளோம். ஒவ்வொரு இடத்திற்கும் மாற்று வீரர்கள் இருக்கிறார்கள்.

இந்த பெஞ்ச் வலிமை இந்திய அணியை மூன்று வகை கிரிக்கெட்டிலும் வலிமை படுத்தும் என நம்புகிறேன் என்று எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News