செய்திகள்
சாய்ஃப் அலிகான், அனுஷ்கா ஷர்மா, கரீனா கபூர், விராட் கோலி

சாய்ஃப் அலி கான், கரீனா கபூர் உடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடிய விராட் கோலி - அனுஷ்கா சர்மா

Published On 2020-01-01 10:42 GMT   |   Update On 2020-01-01 10:42 GMT
சுவிட்சர்லாந்தில் பாலிவுட் ஜோடியான சாய்ஃப் அலி கான், கரீனா கபூர் உடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடினர் விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.

கிறிஸ்துமஸ் அன்று பனிகளால் நிறைந்த மலைப்பகுதியில் நின்றபடி இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோவை விராட் கோலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அப்போதுதான் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா ஜோடி சுவிட்சர்லாந்தில் உள்ளனர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்றிரவில் இருந்து உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா சுவிட்சர்லாந்தில் உள்ள நிலையில், பாலிவுட் பிரபலங்களான சாய்ப் அலி கான், கரீனா கபூர், வருண் தவான், நட்டாஷா தலால் ஆகியோரும் அங்கு சென்றுள்ளனர். அனைவரும் இணைந்து புத்தாண்டை வரவேற்றனர்.

அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட படத்தை அனுஷ்கா ஷர்மா, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News