செய்திகள்
பிரிஸ்பேன் டென்னிசில் மரியா ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு
காயத்தால் நீண்ட நாட்களாக டென்னிஸில் இருந்து விலகியிருந்த மரியா ஷரபோவா, பிரிஸ்பேன் டென்னிஸில் களம் இறங்குகிறார்.
ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி வருகிற 6-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் நேரடியாக விளையாட முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரஷியாவின் மரியா ஷரபோவாவுக்கு ‘வைல்டு கார்டு’ சலுகை வழங்கப்பட்டு உள்ளது. இதை ஷரபோவா ஏற்றுக் கொண்டார்.
காயம் மற்றும் தொடர் தோல்விகளால் தரவரிசையில் 133-வது இடத்துக்கு தள்ளப்பட்ட 32 வயதான ஷரபோவா புத்தாண்டில் எழுச்சி பெறும் வேட்கையுடன் ஆயத்தமாகி வருகிறார்.
‘‘பிரிஸ்பேன் போட்டியை இதற்கு முன்பு பலமுறை தவற விட்ட நிலையில், தற்போது புத்தாண்டை இந்த போட்டியுடன் தொடங்குவது உத்வேகம் அளிக்கிறது’’ என்று ஷரபோவா கூறியுள்ளார்.