செய்திகள்
ரஷித் கான்

மிகவும் மோசமான நிகழ்வுடன் 2019 வருடத்தை நிறைவு செய்த ரஷித் கான்

Published On 2019-12-31 19:44 IST   |   Update On 2019-12-31 19:44:00 IST
பிக் பாஷ் டி20 லீக்கில் நான்கு ஓவர்களில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து, மோசமான நிகழ்வுடன் 2019-ஐ நிறைவு செய்துள்ளார் ரஷித் கான்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். அவர் உலக அளவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் லீக் தொடர்களில் ஜாம்பவானாக திகழ்கிறார். தற்போது நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக்கில் விளையாடி வருகிறார்.

இவர் இடம் பிடித்திருக்கும் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் சிட்னி தண்டர் அணியை எதிர்கொண்டது. முதலில் சிட்னி தண்டர் அணி பேட்டிங் செய்து 168 ரன்கள் குவித்தது. சிட்னி தண்டர் அணியின் பேட்ஸ்மேன்கள் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

ரஷித் கான் நான்கு ஓவர்களில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதுவரை பிக் பாஷ் டி20 லீக்கில் இவ்வளவு ரன்கள் விட்டுக்கொடுத்தது இல்லை. 2019-ம் ஆண்டு முடிவு அவருக்கு மோசமாக அமைந்துள்ளது.

Similar News