செய்திகள்
விராட் கோலி, அனில் கும்ப்ளே

கேப்டனாக விராட் கோலி முதிர்ச்சி அடைந்துள்ளார்: அனில் கும்ப்ளே

Published On 2019-12-31 13:10 GMT   |   Update On 2019-12-31 13:10 GMT
இந்தியாவின் மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி தலைசிறந்த கேப்டன் என சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக இருக்கும்போது இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் அனில் கும்ப்ளே தனது ஒரு வருட தலைமை பயிற்சியாளர் பதவியை நீட்டிக்க விரும்பவில்லை.

உரசல் இருந்ததாக தகவல் வெளியான நிலையில் கூட, விராட் கோலியின் தலைசிறந்த கேப்டன் என்று தெரிவித்துள்ளார்.

விராட் கோலி கேப்டன்ஷிப் குறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘விராட் கோலியை ஐந்து வருடங்களாக கேப்டன் பதவியில் நாம் பார்த்திருக்கிறோம். அவர் உண்மையிலேயே முதிர்ச்சி அடைந்துள்ளார்.

அணியில் தொடர்ச்சியாக சில வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அணி எப்போதெல்லாம் திணறியதோ, அப்போதெல்லாம் தனி வீரராக நின்று அணியை நிமிர்த்தியுள்ளார்.

தற்போது அவர் கேப்டனாக இருந்தபோதிலும். இங்கிலாந்து உலகக்கோப்பை அவருக்கு முதல் உலகக்கோப்பை. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அவரது தலைமை மிகவும் சிறப்பானதாக உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரை பார்த்தீர்கள் என்றால், இக்கட்டான நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

டெஸ்ட் போட்டியை பொறுத்த வரையில் பேட்டிங், பந்து வீச்சு என இந்தியா மிகவும் வசதியான நிலையில் உள்ளது. டெஸ்ட் போட்டியில் அவர் வசதியான கேப்டன். ஏனென்றால், யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். இதேபோன்று டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் தேடிப்பிடிப்பது அவசியம்’’ என்றார்.
Tags:    

Similar News