செய்திகள்
டி காக், ஜாப்ரா ஆர்ச்சர்

கூக்கபுர்ரா பந்தை பயன்படுத்த ஆர்ச்சருக்கு சரியாக தெரியவில்லை: டேல் ஸ்டெயின்

Published On 2019-12-30 16:50 IST   |   Update On 2019-12-30 16:50:00 IST
செஞ்சூரியன் டெஸ்டில் ரன்களை அதிக அளவில் விட்டுக்கொடுத்த ஆர்ச்சருக்கு, கூக்கபுர்ரா பந்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரியவில்லை என்று ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரன்கள் குவிக்க கடினமான ஆடுகளத்தில் ஆர்ச்சர் 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினாலும் ஓவருக்கு சராசரியாக 6 ரன்கள் வாரி வழங்கினார். அவர் 17 ஓவர்களில் 102 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

குறிப்பாக டி காக் அவரது பந்தில் மூன்று சிக்சர்கள் விளாசினார். இங்கிலாந்தில் டியூக் பந்து பயன்படுத்தப்படும். அதேவேளையில் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் கூக்கபுர்ரா பந்து பயன்படுத்தப்படும்.

ஆர்ச்சர் பந்து வீச்சு பற்றி வேகப்பந்து ஜாம்பவான் டேல் ஸ்டெயினிடம் கேட்கப்பட்டது. அப்போது, ‘‘கூக்கபுர்ரா பந்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆர்ச்சருக்கு தெரியவில்லை. அவருக்கு ஏற்ற சிறந்த பேட்ஸ்மேன் டி காக்’’ என்றார்.

Similar News