செய்திகள்
அதிரடி தொடக்கம் கொடுத்த ரோகித் சர்மா - கேஎல் ராகுல் ஜோடி

ரோகித் சர்மா, ராகுல், கோலி அபார ஆட்டம் - வெஸ்ட் இண்டீசுக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

Published On 2019-12-11 15:23 GMT   |   Update On 2019-12-11 15:23 GMT
மும்பையில் நடக்கும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 241 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
மும்பை:

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். சிக்சர், பவுண்டரிகளாக பறக்க விட்டனர்.

ஆட்டத்தின் 3வது ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் சர்மா சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்து அசத்தினார்.

அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 34 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி என 71 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய ரிஷப் பந்த் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.

மறுபுறம் ராகுல் தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். கேப்டன் விராட் கோலி அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் இந்திய அணியின் ரன் வேகம் மீண்டும் உயர்ந்தது. 

பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் 91 ரன்னில் அவுட்டானார். விராட் கோலி 5 சிக்சர், 3 பவுண்டரியுடன் 21 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 70 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

இதையடுத்து, 241 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கி விளையாடி வருகிறது.
Tags:    

Similar News