செய்திகள்
அஸ்கர் ஆப்கன்

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக அஸ்கர் ஆப்கன் மீண்டும் நியமனம்

Published On 2019-12-11 12:16 GMT   |   Update On 2019-12-11 12:16 GMT
ஆப்கானிஸ்தான் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக அஸ்கர் ஆப்கன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பிடித்த அணிகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். அந்தத் தொடரில் ஏதாவது ஒரு அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9 லீக் ஆட்டத்திலும் தோல்வியடைந்து ஒரு புள்ளி கூட இல்லாமல் பரிதாபமாக வெளியேறியது.

ஆனால், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன் யாரும் எதிர்பார்க்காத வகையில் அஸ்கர் ஆப்கன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குல்பதின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சில சர்ச்சைகளால் குல்பதின் நைப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவரை தொடர்ந்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகை கிரிக்கெட் அணிக்கும் ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் மோசமான பார்ம் காரணமாக அந்த அணி ஒருநாள் மற்ற்ம் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக அஸ்கர் ஆப்கன் மீண்டும் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News