செய்திகள்
அஸ்வின்

மதுரையில் இருந்து அதிக அளவில் கிரிக்கெட் வீரர்கள் வர வேண்டும் - அஸ்வின்

Published On 2019-12-11 10:42 GMT   |   Update On 2019-12-11 10:42 GMT
மதுரையில் இருந்து அதிக அளவில் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வர வேண்டும் என்று சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பேசினார்.
மதுரை:

மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 60-வது ஆண்டு விழா மற்றும் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள், நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மதுரை பாண்டியன் ஓட்டலில் நடந்தது.

மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரருமான வெங்கடரமணா தலைமை தாங்கினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுரவ செயலாளர் ராமசாமி, உதவி இணைச் செயலாளர் வெங்கட்ராமன், முன்னாள் துணைச் செயலாளர் ஆர்.ஐ.பழனி, பி.சி.சி.ஐ. நடுவர் பரத்குமார், தேர்வு கமிட்டி உறுப்பினர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் பேசினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் கலந்து கொண்டு கிரிக்கெட் அணி வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பரிசுகள் வழங்கினார்.

மதுரை தொன்மை கால நகரமாக இன்றும் விளங்கி வருகிறது. மதுரை எனக்கு விருப்பமான நகரம் ஆகும். மதுரையில் நான் விளையாடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட, மதுரை எனக்கு பிடித்த ஊராக உள்ளது.

மதுரையில் கிரிக்கெட் விளையாட்டுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மதுரையைப் போன்ற பாரம்பரியமிக்க நகரில் இருந்து இந்திய அணிக்கு அதிக வீரர்கள் வர வேண்டும்.

இளைஞர்கள் தோல்வியை கண்டு சோர்ந்து விடாமல், விடாமுயற்சியுடன், தொடர் முயற்சியும் இருந்தால் சாதிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கங்காராம்சிங் என்ற அல்வா அருண், காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் மகேந்திரன், மன்னர் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ராகவன், மதுரை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ரங்கராஜன் மற்றும் மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க அணி செயலாளர்கள், நிர்வாகிகள், வீரர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News