செய்திகள்
சதமடித்த தினேஷ் கார்த்திக்

ரஞ்சி டிராபி: தினேஷ் கார்த்திக் சதமடிக்க தமிழகம் 307 ரன்னில் ஆல் அவுட்

Published On 2019-12-11 10:40 GMT   |   Update On 2019-12-11 10:40 GMT
ரஞ்சி டிராபியில் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் ஆடி சதமடிக்க, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 307 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
திண்டுக்கல்:

ரஞ்சி டிராபி 2019-2020 சீசனில் முதல் சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற கர்நாடகா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 43 ரன்கள் சேர்த்தார். தேவ்தத் படிக்கல் 75 ரன்கள் சேர்த்தார். தேஷ்பாண்டே 65 ரன்கள் அடிக்க கர்நாடகா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுடுக்கு 259 ரன்கள் எடுத்திருந்தது. கே.கவுதம் 51 ரன்கள் எடுக்க கர்நாடகா 336 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனது.

தமிழ்நாடு அணி சார்பில் ஆர். அஸ்வின் 4 விக்கெட்டும், விக்னேஷ் மற்றும் சித்தார்த் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபினவ் முகுந்த், முரளி விஜய் களமிறங்கினர்.

அபினவ் முகுந்த 47 ரன், முரளி விஜய் 32 ரன், பாபா அபராஜித் 37 ரன், விஜய் சங்கர் 12 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

சீரான இடைவெளியில் ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், தினேஷ் கார்த்திக் பொறுப்புடன், நிதானமாக ஆடினார். அவர் சதமடிக்க 113 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடி இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், தமிழ்நாடு அணி 109.3 ஓவரில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கர்நாடகா அணி சார்பில் கிருஷ்ணப்பா கவுதம் சிறப்பாக பந்து வீச் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து, கர்நாடகா அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.
Tags:    

Similar News