செய்திகள்
ஜேம்ஸ் பேட்டின்சன்

சக அணி வீரரை மோசமாக திட்டியதால் பாகிஸ்தான் டெஸ்டில் விளையாட ஆஸி. வீரருக்கு தடை

Published On 2019-11-17 13:47 GMT   |   Update On 2019-11-17 13:47 GMT
ஷெஃப்பீல்டு ஷீல்டு போட்டியின்போது சக வீரரை மோசமாக திட்டியதால் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
  • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் பிரிஸ்பேரினில் 21-ந்தேதி தொடங்குகிறது
  • மிட்செல் ஸ்டார்க் - ஜேம்ஸ் பேட்டின்சன் இடையே கடும் போட்டி நிலவியது
  •  பேட்டின்சன் ஏற்கனவே இதே பிரச்சனையில் சிக்கியுள்ளார்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஷெஃப்பீல்டு ஷீல்டு. இந்தத் தொடரில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் விக்டோரியா - குயின்ஸ்லாந்து அணிகள் மோதின. விக்டோரியா அணியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் இடம் பிடித்திருந்தார்.

விக்டோரியா அணி பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஜேம்ஸ் பேட்டின்சன் சக அணி வீரரை திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்துள்ளது. ஏற்கனவே இதுபோன்று இரண்டு முறை நடைபெற்றுள்ளதால் இந்த தடையை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரிஸ்பேனில் வருகிற 21-ந்தேதி தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதை அணி கேப்டன் டிம் பெய்ன் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரிஸ்பேன் டெஸ்டில் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க இவருக்கும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. தற்போது ஸ்டார்க் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News