செய்திகள்
விராட் கோலி

அதிக இன்னிங்ஸ் வெற்றிகளை ருசித்த கேப்டன்: டோனி, அசாருதீன், கங்குலியை முந்தி விராட் கோலி சாதனை

Published On 2019-11-17 13:09 GMT   |   Update On 2019-11-17 13:09 GMT
வங்காளதேச அணிக்கெதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்றதன் மூலம், அதிக முறை இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த இந்திய கேப்டன் என விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த இன்னிங்ஸ் வெற்றியோடு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 10-வது முறையாக இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம் அதிக முறை இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த இந்திய அணி கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

எம்எஸ் டோனி 9 இன்னிங்ஸ் வெற்றிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அசாருதீன் 8 வெற்றிகளுடன் 3-வது இடத்திலும், கங்குலி 7 வெற்றிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
Tags:    

Similar News