செய்திகள்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

பெண்கள் கிரிக்கெட்: 3-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

Published On 2019-11-07 12:00 GMT   |   Update On 2019-11-07 12:00 GMT
நார்த் சவுண்டில் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய பெண்கள் அணி.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் உள்ள நார்த் சவுண்டில், உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் டெய்லர் 79 ரன்கள் அடித்தார். மற்ற வீரராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் சரியாக 50 ஓவரில் 194 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

அதன்பின் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோட்ரிக்ஸ் 69 ரன்னிலும், மந்தனா 74 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பூனம் ரவத் 24 ரன்னும், மிதலி ராஜ் 20 ரன்னும் அடிக்க இந்தியா 42.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் சேர்த்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
Tags:    

Similar News