செய்திகள்
புஜாரா

ரஞ்சி டிராபியில் ‘பிங்க்’ பந்து பயன் படுத்தப்படுமா? என்பது தெரியாது: புஜாரா

Published On 2019-11-07 11:29 GMT   |   Update On 2019-11-07 11:29 GMT
இந்தியாவின் முக்கியமான உள்ளூர் தொடரான ரஞ்சி டிராபியில் ‘பிங்க்’ பந்து பயன் படுத்தப்படுமா? என்பது எனக்கு உறுதியாக தெரியாது என புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டம் பகல்-இரவு டெஸ்ட் ஆக ‘பிங்க்’ பந்தில் நடக்கிறது. இந்திய அணி இதற்கு முன் ‘பிங்க்’ பந்தில் விளையாடியதில்லை. முதன்முறையாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது. அதற்கு முன் பெரிய அளவில் விளையாடிய அனுபவம் இல்லை.

இந்த போட்டிக்குப்பின் இந்தியாவின் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியில் ‘பிங்க்’ பந்து பயன்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து புஜாரா கூறுகையில் ‘‘ரஞ்சி டிராபி போட்டிகள் பகல்-இரவாக நடைபெறுமா? என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. வங்காளதேசத்திற்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் விளையாடிய பிறகு, நமக்கு சிறப்பான ஐடியா கிடைக்கும். அதன் பிறகு அதை எப்படி முன்னோக்கி எடுத்த செல்ல முடியும் என்பதை நம்மால் கண்டறிய முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News