செய்திகள்
ஸ்காட்லாந்து வீரர் முன்சே

டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது

Published On 2019-10-30 15:46 GMT   |   Update On 2019-10-30 15:46 GMT
உலகக்கோப்பை குவாலிபையர் பிளே-ஆப் சுற்றில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடக்கிறது.

இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்று துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள பப்புவா நியூ கினியா ஐந்து வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் முதல் இடம் பிடித்தது. இதனால் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

‘பி’ பிரிவில் அயர்லாந்து நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் ரன் விகிதம் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்தது. இதன்மூலம் அயர்லாந்து அணியும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. முதல் பிளே-ஆப் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி நெதர்லாந்து 3-வது அணியாக தகுதி பெற்றது.

இன்று நடைபெற்ற 3-வது குவாலிபையிங் பிளே-ஆப் பேட்டியில் ஸ்காட்லாந்து - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 198 ரன்கள் குவித்தது. முன்சே 65 ரன்களும், பெர்ரிங்டன் 18 பந்தில் 48 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் விளையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 108 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஸ்காட்லாந்து 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து டி20 உலகக்கோப்பைக்கான முதல் சுற்றுக்கு தகுதி பெற்றது.
Tags:    

Similar News