செய்திகள்
எலினா ஸ்விடோலினா

டபிள்யூடிஏ பைனல்ஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் எலினா ஸ்விடோலினா

Published On 2019-10-30 19:55 IST   |   Update On 2019-10-30 19:55:00 IST
உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனைகளுக்கு இடையிலான டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள ஷின்சென்னில் நடைபெற்று வருகிறது.
8 வீராங்கனைகளும் ரெட், பர்பிள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவில் உள்ள நான்கு வீராங்கனைகளும் மற்ற வீராங்கனைகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.

இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பர்பிள் பிரிவில் இடம் பிடித்துள்ள சிமோனா ஹாலெப் - எலினா ஸ்விடோலினா மோதினார்கள்.

முதல் செட்டை எலினா 7-5 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய எலினா, அதையும் 6-3 எனக் கைப்பற்றினார். ஏற்கனவே, கரோலினா பிளிஸ்கோவாவை 2-0 என வீழ்த்தியிருந்தார். இரண்டு வெற்றிகள் மூலம் முதல் நபராக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Similar News