செய்திகள்
மகிழ்ச்சியில் நெதர்லாந்து

டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து

Published On 2019-10-29 15:08 GMT   |   Update On 2019-10-29 15:08 GMT
உலகக்கோப்பைக்கான குவாலிபையர் முதல் பிளே-ஆப் போட்டியில் ஐக்கி அரபு எமிரேட்ஸ் அணியை துவம்சம் செய்து டி20 உலகக்கோப்பைக்கு தகுதிப் பெற்றது நெதர்லாந்து.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடக்கிறது.

இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்று துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள பப்புவா நியூ கினியா ஐந்து வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் முதல் இடம் பிடித்தது. இதனால் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

‘பி’ பிரிவில் அயர்லாந்து நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் ரன் விகிதம் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்தது. இதன்மூலம் அயர்லாந்து அணியும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இன்று முதல் பிளே-ஆப் ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 9 விக்கெட் இழப்பிற்க 80 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 81 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களம் இறங்கியது. அந்த அணி 15.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 81 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி உலகக்கோப்பை தொடருக்கான முதல் சுற்றுக்கு தகுதி பெற்றது.
Tags:    

Similar News