செய்திகள்

போன் பேசியபடியே கார் ஓட்டிய டேவிட் பெக்காமுக்கு 6 மாதம் தடை

Published On 2019-05-09 19:43 IST   |   Update On 2019-05-09 19:43:00 IST
போன் பேசியபடியே கார் ஓட்டிய முன்னாள் இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டன் டேவிட் பெக்காமுக்கு 6 மாதம் டிரைவிங் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. #DavidBeckham
இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம். தலைசிறந்த முன்னாள் கால்பந்து வீரரான பெக்காம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது போன் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து ப்ரோம்லி மாஜிஸ்திரேட் கோர்ட் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே டேவிட் பெக்காம் குற்றவாளி என்று கோர்ட் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று அவருக்கு ஆறு மாதம் டிரைவிங் செய்ய கோர்ட் தடைவிதித்துள்ளது. இந்த வழக்கில் கடந்த மாதமே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். டேவிட் பெக்காமல் நேரில் ஆஜராக வேண்டும் என்பதால் தீர்ப்பு தள்ளிப்போகி இன்று வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News