செய்திகள்

தேவைப்பட்டால் கீழ்வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்வேன்- ஆரோன் பிஞ்ச்

Published On 2019-03-21 13:47 GMT   |   Update On 2019-03-21 13:47 GMT
ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் வருகையால் கீழ்வரிசையில் இறங்கி பேட்டிங் செய்யும் சூழ்நிலை உருவாகினால் அதற்கும் தயார் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். #PAKvAUS
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோர் ஓராண்டு தடையால் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் ஆரோன் பிஞ்ச் கேப்டனாக பொறுப்பேற்றார். அத்துடன் தொடக்க வீரராக களம் இறங்கி பேட்டிங் செய்து வருகிறார்.

ஸ்மித், வார்னர் மீதான தடைக்காமல் வருகிற 28-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருவரும் விளையாட வாய்ப்புள்ளது. அவர் இருவரும் அணியில் இடம்பிடித்தால், வார்னர் தொடக்க வீரராக களம் இறங்குவார். ஸ்மித் 3-வது வீரராக களம் இறங்குவார்.

இருவரும் களம் இறங்கும்போது ஆரோன் பிஞ்ச் எந்த இடத்தில் களம் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இருவருக்காவும் கீழ்வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்யத் தயார் என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிஞ்ச் கூறுகையில் ‘‘என்னை 6-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய சொன்னால் கூட, அதில் களம் இறங்குவேன். டாப் மூன்று அல்லது நான்கு என்பது முக்கியமல்ல’’ என்றார்.
Tags:    

Similar News