செய்திகள்

பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு தங்கம் - காயத்திலிருந்து மீண்ட முதல் போட்டியில் அசத்தல்

Published On 2019-02-07 16:08 GMT   |   Update On 2019-02-07 16:50 GMT
இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு காயத்திலிருந்து மீண்டு தாய்லாந்தில் நடந்த போட்டி ஒன்றில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். #EGATCup #MirabaiChanu
இந்திய பளுதூக்கும் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு (24). மணிப்பூரை சேர்ந்த இவர் கடந்த 2017ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர். கோல்டு கோஸ்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு 196 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார்.

காயத்தினால் அவதிப்பட்ட அவர் கடந்த 9 மாதமாக எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. தொடர் சிகிச்சைக்கு பின் அவர் காயத்திலிருந்து மீண்டார்.

இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் நடந்த ஈ.ஜி.ஏ.டி. கோப்பைக்கான பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு கலந்து கொண்டார்.

இதில், 49 கிலோ எடை பிரிவில் சானு மொத்தம் 192 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். ஜப்பானின் மியாகே ஹிரோமி (183 கிலோ) வெள்ளிப்பதக்கமும், பப்புவா நியூ கினியாவின் லாவோ டிக்கா தவுவா (179 கிலோ) வெண்கலப் பதக்கமும் வென்றனர். #EGATCup #MirabaiChanu
Tags:    

Similar News