செய்திகள்

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து லயன்ஸ்

Published On 2019-01-31 19:00 IST   |   Update On 2019-01-31 19:00:00 IST
இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDA
இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்ற பந்துவீச்சு தேர்வு செய்தது. இங்கிலாந்து லயன்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா ‘ஏ’ 121 ரன்னில் சுருண்டது.

தொடக்க வீரர் கேஎல் ராகுல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஹிம்மத் சிங் 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த லாட் 36 ரன்கள் சேர்த்தார். ஆனால் பவ்னே (0), ரிஷப் பந்த் (7), தீபக் ஹூடா (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் 122 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து லயன்ஸ் களம் இறங்கியது, இந்தியா ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து லயன்ஸ் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டக்கெட் அபாரமான விளையாடினார். அவர் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் சேர்க்க 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 8 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்திருந்தது. டக்கெட் கடைநிலை வீரர் கார்ட்டர் (2), பெய்லி (1 நாட்அவுட்) ஆகியோரை வைத்துக் கொண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்துவிட்டார்.
Tags:    

Similar News