செய்திகள்

பார்ம் இன்றி தவிக்கும் மிட்செல் ஸ்டார்க் மீதான விமர்சனம் நியாயமானதல்ல: நாதன் லயன்

Published On 2019-01-30 10:12 GMT   |   Update On 2019-01-30 10:12 GMT
டெஸ்ட் போட்டியில் விக்கெட் வீழ்த்த திணறி வரும் மிட்செல் ஸ்டார்க் மீதான விமர்சனம் நியாயமானதல்ல என்று நாதன் லயன் தெரிவித்துள்ளார். #AUSvSL #MitchellStarc
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இந்தியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டிலும் சோபிக்கவில்லை. ஐந்து போட்டிகளிலும் 15 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

பேட் கம்மின்ஸ் அபாரமாக விளையாடி வரும் நிலையில், மிட்செல் ஸ்டார்க் திணறி வருகிறார். இதனால் அவர் மீது கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ள மிட்செல் ஸ்டார்க்கை விமர்சனம் செய்வது நியாயமானதல்ல என்று சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘உண்மையிலேயே மிட்செல் ஸ்டார்க் குறித்த விமர்சனங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மிட்செல் ஸ்டார்க் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். யாராவது ஒருவரால் 200 விக்கெட் வீழ்த்த முடியும் என்றால், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். மிட்செல் ஸ்டார்க்கிற்கு நான் ஆதரவாக உள்ளேன். வீரர்கள் டிரஸ்ஸிங் அறையில் ஒவ்வொருவரும் ஆதரவாக உள்ளனர். ஆகவே இது முற்றிலும் நியாயமானதல்ல’’ என்றார்.
Tags:    

Similar News