செய்திகள்

பயிற்சி ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த பேட்ஸ்மேனுக்கு ஆஸி. அணியில் இடம்

Published On 2019-01-21 15:44 IST   |   Update On 2019-01-21 15:44:00 IST
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசிய பேட்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். #AUSvIND
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேன் ‘கப்பா’வில் வருகிற 24-ந்தேதி பகல்-இரவு டெஸ்டாக நடைபெறுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இடது கை பேட்ஸ்மேனான கர்ட்டிஸ் பேட்டர்சன் இரண்டு இன்னிங்சிலும் முறையே 157, 102 அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில் பிரிஸ்பேன் டெஸ்டிற்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பேட்டர்சன் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து தேர்வாளர் டிரேவோர் ஹோன்ஸ் கூறுகையில் ‘‘கர்ட்டிஸ் வியாழக்கிழமை தொடங்கும் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், நாட்டில் நடக்கும் முக்கியமான தொடர்களில் சதம் அடிக்க வேண்டும். கர்ட்டிஸ் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த வாரம் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும சதம் அடித்துள்ளார். இதனால் அவர் அணிக்கு தகுதியானவர் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்றார்.
Tags:    

Similar News