செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை வீரர்களுக்கு ஐசிசி அபராதம்

Published On 2019-01-03 14:21 GMT   |   Update On 2019-01-03 14:21 GMT
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இலங்கை வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. #NZvSL
நியூசிலாந்து - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 371 ரன்கள் குவித்தது. கப்தில் 139 ரன்கள் விளாசினார்.

பின்னர் 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. குசால் பெரேரா (102), டிக்வெல்லா (76), குணதிலகா (43) ஆகியோர் சிறப்பாக விளையாடிய போதிலும் இலங்கை 326 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யும்போது இலங்கை பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து இலங்கை வீரர்களுக்கு தலா 10 சதவிகிதமும், கேப்டன் மலிங்காவிற்கு 20 சதவிகிதமும் அபராதம் விதித்தது ஐசிசி.
Tags:    

Similar News