செய்திகள்

வெஸ்ட் இண்டீஸை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம்

Published On 2018-12-20 15:11 GMT   |   Update On 2018-12-20 15:12 GMT
டாக்காவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம். #BANvWI
வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 டாக்காவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.

பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. லெவிஸ் - ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூரன் 14 ரன்னிலும், ஹெட்மையர் 19 ரன்னிலும் வெளியேறினார்கள்.

அதிரடி காட்டிய ஷாய் ஹோப் 19 பந்தில் 6 பவுண்டரியுடன் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆர் பொவேல் 34 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 175 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காள தேசம் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதனால் தொடர் 1-1 சமநிலையில் உள்ளது. 3-வது டி20 கிரிக்கெட் போட்டி 22-ந்தேதி நடக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.
Tags:    

Similar News