செய்திகள்

ஐபிஎல் வீரர்கள் ஏலம்: யுவராஜ் சிங் ஏலம் போகவில்லை, வெஸ்ட் இண்டீஸ் கேப்டனுக்கு ரூ. 5 கோடி

Published On 2018-12-18 16:23 IST   |   Update On 2018-12-18 16:23:00 IST
ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் யுவராஜ் சிங்கை எந்த அணியும் ஏலம் எடுக்க விரும்பவில்லை. கார்லஸ் பிராத்வைட்டை ரூ.5 கோடிக்கு கொல்கத்தா ஏலம் எடுத்தது. #IPL2019 #IPLAuction2019
ஐபிஎல் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுவராஜ் சிங்கிற்கு அடிப்படை விலையாக 1 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அவரை எந்த அணி உரிமையாளர்களும் ஏலம் எடுக்க விரும்பவில்லை. இதனால் அவர் ஏலம் போகவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி கேப்டனான கார்லஸ் பிராத்வைட்டை எடுக்க பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டின. இறுதியில் கொல்கத்தா அணி ஐந்து கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஹென்ரிக்ஸை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
Tags:    

Similar News