செய்திகள்

வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்- வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2018-12-12 12:32 GMT   |   Update On 2018-12-12 12:32 GMT
வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஷாய் ஹோப்பின் அபார சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #BANvWI
வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் தமிம் இக்பால் (50), முஷ்பிகுர் ரஹிம் (62), ஷாகிப் அல் ஹசன் (65) ஆகியோரின் ஆட்டத்தால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் ஹேம்ராஜ் (3), அடுத்து வந்த டேரன் பிராவோ (27), சாமுவேல்ஸ் (26), ஷிம்ரோன் ஹெட்மையர் (14) குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்தாலும், தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான ஷாய் ஹோப் அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 144 பந்தில் 146 ரன்கள் விளாச, வெஸ்ட் இண்டீஸ் 49.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளைமறுநாள் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
Tags:    

Similar News