செய்திகள்

மீண்டும் பயிற்சியாளர் பணியில் அமர்த்துக: ரமேஷ் பவாருக்கு ஆதரவாக வீராங்கனைகள் பிசிசிஐ-க்கு கடிதம்

Published On 2018-12-04 11:58 GMT   |   Update On 2018-12-04 11:58 GMT
தேசிய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அப்ளிகேசன் வெளியிட்டுள்ள நிலையில், ரமேஷ் பவாருக்கு ஆதரவாக வீராங்கனைகள் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளனர். #BCCI #RameshPowar
இந்திய தேசிய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் செயல்பட்டு வந்தார். இவரது தலைமையில் இந்திய பெண்கள் அணி வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை எதிர்கொண்டது.

அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்து வெளியேறியது. லீக் போட்டியின்போது இரண்டு போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகி விருது பெற்ற மிதாலி ராஜ் அரையிறுதியில் சேர்க்கப்படவில்லை. இதற்கு காரணம் ரமேஷ் பவாருக்கும், மிதாலி ராஜிற்கும் இடையில் நடைபெற்ற மோதல்தான் காரணம் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் நவம்பர் 30-ந்தேதியுடன் ரமேஷ் பவார் பதவிக்காலம் முடிவடைந்தது. அன்று மாலையே பயிற்சியாளர் பதவிக்கு விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் பெண்கள் அணியின் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன ஹர்மன்ப்ரீத் கவும், மற்றொரு வீராங்கனை மந்தனா ஆகியோர் மீண்டும் ரமேஷ் பவாருக்கு பதவி வழங்குங்கள் என்று பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Tags:    

Similar News