செய்திகள்

உலககோப்பை ஹாக்கி போட்டி - அயர்லாந்தை 2 - 1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Published On 2018-11-30 21:31 IST   |   Update On 2018-11-30 21:31:00 IST
ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலியா அணி அயர்லாந்து அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Australia #Ireland
புவனேஸ்வர்:

14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள அயர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பிலேக் கோவர்ஸ் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப் படுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அயர்லாந்து வீரர் ஷானோ டொனொக் 14வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 34வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் டிம் பிராண்ட் அபாரமாக ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், ஆஸ்திரேலியா அணி அயர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் டிமோதி பிராண்ட் பெற்றார். #HockeyWorldCup2018  #Australia #Ireland
Tags:    

Similar News