செய்திகள்

3-வது ஒருநாள் போட்டியில் 40 ரன்னில் வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

Published On 2018-11-11 11:00 GMT   |   Update On 2018-11-11 11:00 GMT
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா #AUSvSA
ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. டு பிளிசிஸ் 114 பந்தில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் 125 ரன்களும்,
டேவிட் மில்லர் 108 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 139 ரன்கள் குவிக்கவும் தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.



321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர் கிறிஸ் லின் டக்அவுட்டிலும், ஆரோன் பிஞ்ச் 11 ரன்னிலும் வெளியேறினார்கள்.

அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் சிறப்பாக விளையாடி 102 பந்தில் 106 ரன்கள் சேர்த்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 63 ரன்களும், அலெக்ஸ் கேரி 42 ரன்களும், மேக்ஸ்வெல் 35 ரன்னிலும் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியாவால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.



இதனால் தென்ஆப்பிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
Tags:    

Similar News