செய்திகள்

இலங்கை - இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து- ரசிகர்கள் ஏமாற்றம்

Published On 2018-10-11 09:57 GMT   |   Update On 2018-10-11 09:57 GMT
இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அளித்தனர். #SLvENG
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தம்புல்லாவில் தொடங்கியது. பகல்-இரவு போட்டியினான முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஜேசன் ராய் 27 பந்தில் 24 ரன்களும், பேர்ஸ்டோவ் 24 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



அடுத்து வந்த ஜோ ரூட்டும், கேப்டன் மோர்கனும் அதிரடியை தொடங்கினார்கள். ஜோ ரூட் 28 பந்தில் 25 ரன்களும், மோர்கன் 11 பந்தில் 14 ரன்களும் அடித்திருந்த போது இங்கிலாந்து 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது கனமழை பெய்ய ஆரம்பித்தது. நீண்ட நேரம் மழை விடாததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தார். இதனால் முடிவின்றி முதல் ஆட்டம் முடிவுக்கு வந்ததது. மழையால் ஆட்டம் தடைபட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 2-வது போட்டி தம்புல்லாவில் நாளைமறுநாள் (13-ந்தேதி) நடக்கிறது.
Tags:    

Similar News