செய்திகள்

‘ஒசாமா’ என அழைத்தனர் என்ற மொயீன் அலி குற்றச்சாட்டிற்கு புது ஆதாரம் இல்லை- ஆஸ்திரேலியா

Published On 2018-09-24 12:34 GMT   |   Update On 2018-09-24 12:34 GMT
ஒசாமா என ஆஸ்திரேலியா வீரர்கள் அழைத்தனர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது.
இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் மொயீன் அலி. இவர் தனது சுயசரிதை புத்தகத்தில் 2015 ஆஷஸ் தொடரின்போது கார்டிப் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் தன்னை ‘ஒசாமா’ என்று குறிப்பிட்டு இனவெறியை தூண்டிம் வகையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மொயீன் அலி குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருந்தது.



இந்நிலையில் மொயீன் அலி விவகாரம் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூறுகையில்  “இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து இந்தச் சம்பவம் அப்போதே விசாரிக்கப்பட்டது. இதன் முடிவையும் மொயீன் அலியிடம் தெரிவிக்கப்பட்டது.  அவரும் இதனை மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை.

மேலும், புதிய விசாரணைகளில் அவரது புகாருக்கான புதிய ஆதாரங்களும் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News