செய்திகள்

துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி - இந்திய வீரர் ஹிரிடே ஹசாரிகா தங்கம் வென்றார்

Published On 2018-09-07 12:05 IST   |   Update On 2018-09-07 12:05:00 IST
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று இந்திய இளம் வீரர் ஹிரிடே ஹசாரிகா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். #ISSFWCH #HridayHazarikaGold
சாங்வான்:

தென்கொரியாவின் சாங்வான் நகரில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய இளம் வீரர்கள் அசத்தி வருகின்றனர். அவ்வகையில் இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் ஹிரிடே ஹசாரிகா சாதனை படைத்துள்ளார்.



ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் (ஜூனியர்) ஹிரிடே ஹசாரிகா, ஈரான் வீரர் அமிர் முகமது இருவரும் 250.1 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தனர். அவர்களில் ஒருவரை தங்கப்பதக்கத்துக்கு தேர்வு செய்ய வேண்டும். இதற்காக, அவர்களுக்கிடையே ஹூட்ஆப் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பில் ஹசாரிகா 10.3 புள்ளிகளும், அமிர் முகமது 10.2 புள்ளிகளும் பெற்றனர். எனவே, 0.1 புள்ளி வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை வென்றார் ஹசாரிகா, அமிர் முகமதுவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 228.6 புள்ளிகள் பெற்ற ரஷ்ய வீரர் கிரிகோரி வெண்கலம் வென்றார். #ISSFWCH #HridayHazarikaGold

Tags:    

Similar News